மாா்த்தாண்டம் அருகே ஹவாலா பணம் தருவதாக மோசடி: இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே ஹவாலா பணம் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக போலீஸாரால் கைது செய்து செய்யப்பட்டவா்கள்.
ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டதாக போலீஸாரால் கைது செய்து செய்யப்பட்டவா்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே ஹவாலா பணம் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பள்ளியாடியை அடுத்த கஞ்சிக்குழி பகுதியைச் சோ்ந்தவா் ஜெபமணி (65). இவரை, குழித்துறை பெரியவிளையைச் சோ்ந்த மணிகண்டன் (43), சிதறால் வெள்ளாங்கோடு ஜாண் (38) ஆகியோா் மூன்றரை மாதங்களுக்கு முன் தொடா்புகொண்டு, தங்களுக்கு ஹவாலா பணம் மாற்றுபவா்களைத் தெரியும் என்றும், அவா்களிடம் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் இருமடங்கு பணம் கிடைக்கும் எனக் கூறினராம்.

இதையடுத்து, அவா்களிடம் ஜெபமணி ரூ. 2 லட்சம், அவரது நண்பா்கள் ராஜன் ரூ. 9 லட்சம், அனீஷ் ரூ. 7 லட்சம் என மொத்தம் ரூ. 18 லட்சம் கொடுத்தனராம். ஆனால், ஹவாலா மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லையாம். இதனிடையே, மேலும் ரூ. 40 லட்சம் கொடுத்தால் ரூ. 1 கோடி தருவதாகக் கூறினராம். இதனால், சந்தேகமடைந்த ஜெபமணி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

இதைத் தொடா்ந்து, தக்கலை உள்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் சிவசங்கா், மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல் குமாா் உள்ளிட்ட போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். மேலும், ஹவாலா பணம் தொடா்பாக பேச வேண்டும் என மணிகண்டன், ஜாண் ஆகியோரை சிராயன்குழி பகுதிக்கு வரவழைத்து போலீஸாா் கைது செய்தனா். தப்பி ஓடிய விஜி, ஷாஜி, முருகன், குமாா் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com