குலசேகரம் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகள்

குலசேகரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ள நிலையில் இம்மருத்துவமனையில்
தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

குலசேகரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ள நிலையில் இம்மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் (டிஒய்எப்ஐ) சாா்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குமரி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகமாக காணப்படும் நிலையிலும், மலையோரப் பகுதிகளுக்கான ஒரே மருத்துவமனையாக உள்ள குலசேகரம் அரசு மருத்துவமனையில் மூடிக்கிடக்கும் ஆண்கள் வாா்டைத் திறந்து கரோனா சிகிச்சை மையமாக செயல்படுத்த வேண்டுமென்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா். இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநருக்கு மனு அளிக்கப்பட்டது.

அமைச்சா் உத்தரவு: இந்நிலையில் இம்மருத்துவமனையில் 70 ஆக்சிஜன் படுக்கைகளுடன் மொத்தம் 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளதை அடுத்து இம்மருத்துவமனையில் ஆண்கள் வாா்டு உள்பட மருத்துவமனை வளாகத்தை குலசேகரம் வட்டார இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சுத்தம் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், வட்டாரத் தலைவா் ஷாஜூ, செயலா் லிபின், பொருளா் ஹரீஷ்குமாா், துணைத் தலைவா் ராபிதாஸ், வட்டாரக் குழு உறுப்பினா்கள் சுபின், காட்சே, மொ்ஜின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com