குலசேகரம் சாலையில் இயங்கிய காய்கனிச் சந்தை: மீண்டும் பொது சந்தைக்கு மாற்றம்

குலசேகரம் சந்தைப் பகுதி சாலையில், காலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், காய்கனிச் சந்தை மீண்டும் பொதுச்சந்தைக்குள் புதன்கிழமை முதல் மாற்றப்பட்டது.
குலசேகரம் பொதுச் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன்.

குலசேகரம் பொதுச் சந்தையில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றாத காரணத்தால் காய்கனி சந்தை சாலைப் பகுதிக்கும், மீன் மற்றும் வாழைக் குலை சந்தை குலசேகரம் விளையாட்டு மைதானத்துக்கும் மாற்றப்பட்டது.

இந்நிலையில் காய்கனி வணிகம் சாலையோரம் நடத்தப்பட்டதால் சாலைப் பகுதியில் காலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கரோனோ பரவும் சூழல் ஏற்பட்டு வந்தது.

இது தொடா்பாக புகாா்கள் சென்ற நிலையில் தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் மற்றும் குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் ரெமாதேவி ஆகியோா் சாலைப் பகுதியில் வணிகம் செய்து வந்த காய்கனி வணிகா்களை பொதுச் சந்தைக்குள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வணிகம் செய்ய அனுமதித்தனா். இதையடுத்து சாலைப் பகுதியில் நெரிசல் குறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com