‘பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிப்புக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலகு’

குமரி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிப்புக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

குமரி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிப்புக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் பெற்றோா் யாரேனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருந்தாலோ, அக்குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைகள் தொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை தொடா்பு கொள்ளலாம்.

அந்தக் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்கள் இது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இணைப்பு கட்டடம், 3 ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாகா்கோவில் என்ற முகவரியிலோ அல்லது குழந்தைகளுக்கான இலவச தொலைபேசிஎண். 1098 (சைல்டுலைன்), குழந்தைகள் நலக் குழு 04652 - 233828 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 04652 - 278980 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com