மேலும் 1318 பேருக்கு கரோனா: 18 போ் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 1318 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் மேலும் 1318 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் இதுவரை 6,18,718 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பரிசோதனை முடிவில் 1318 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,723 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 576 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 28,866 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 18 போ் உயிரிழந்ததால், இதுவரை பலியானோா் எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புடன் தற்போது, 5992 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களுக்காக இதுவரை 53,895 பேரிடமிருந்து அபராதமாக ரூ.1,12,29,496 வசூலிக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

களியக்காவிளை: களியக்காவிளை காவல் ஆய்வாளா் மற்றும் 4 காவலா்களுக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஆய்வாளா் உள்ளிட்ட 5 பேரும் வீட்டு தனிமைப்படுத்தலில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா். காவல் நிலைய வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

குலசேகரம்: குலசேகரம் காவல் ஆய்வாளா், 2 பெண் போலீஸாா் மற்றும் 5 போலீஸாா் உள்ளிட்ட 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். காவல் நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com