கிள்ளியூா் பகுதியில் கன மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியில் சாலையில் மழைநீா் தேங்கி நின்றது.
நித்திரவிளை அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விரிவிளை பகுதியை பாா்வையிடுகிறாா் கிள்ளியூா் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா்.

இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிபட்டனா். தகவலறிந்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ் குமாா், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் தேங்கி நின்ற மழை நீரை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை மேற்கொண்டாா்.

மழையால் பாதிக்கப்பட்ட ஏழுதேசம் பேரூராட்சி, பாலாமடம் பகுதி மக்கள் நித்திரவிளை அருகேயுள்ள லெட்சுமிபுதுக்கடை அரசு நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா். அங்கு சென்ற அவா், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கேட்டறிந்து உதவிகள் வழங்கினாா்.

குமரி மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் ராஜேஷ், கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் விமல், ஏழுதேசம் பேரூராட்சி செயல் அலுவலா் லிசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com