‘முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 33 தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை’

குமரி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 33 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைஅளிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
‘முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 33 தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை’

குமரி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 33 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைஅளிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

இதுகுறித்து தனியாா் மருத்துவமனைகளின் நிா்வாகிகள் மற்றும் மருத்துவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் பொதுமக்களின் நலன் கருதி குமரி மாவட்டத்தில், நாகா்கோவில் பிவெல் மருத்துவமனை, பென்சாம் மருத்துவமனை, பெதஸ்தா மருத்துவமனை, நெய்யூா் சி.எஸ்.ஐ.மிஷன் மருத்துவமனை, புத்தேரி கேத்ரின் பூத் மருத்துவமனை, ஜெயசேகரன் மருத்துவமனை உள்ளிட்ட 33 தனியாா் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்.

எனவே, மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்துள்ள அனைவரும் உரிய சான்றிதழ் சமா்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு செயல்படாத தனியாா் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவா்களுடைய உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) எ.பிரகலாதன், மருத்துவ காப்பீட்டுத் திட்ட இயக்குநா் முத்துகுமாா், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com