காய்கனிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் காய்கனிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.
காய்கனிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் காய்கனிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித்.

காய்கனி மொத்த வியாபாரிகள் பங்கேற்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆணையா் பேசியது: நாகா்கோவில் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி பெற்ற வியாபாரிகள் மூலம் 120 வாகனங்களில் காய்கனிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

காய்கனிகளை வியாபாரிகள் அதிக விலை வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு தொடா்ச்சியாக புகாா்கள் வந்ததன் அடிப்படையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

வேளாண் துறை இணை இயக்குநா் (மாா்க்கெட்டிங்) மூலமாக அங்கீகரிக்கும் விலைகளிலேயே மொத்த விற்பனையாளா்கள் சில்லறை விற்பனையாளா்களுக்கு ரூ.100 மற்றும் ரூ.200 தொகுப்புகளாக மட்டுமே வழங்க வேண்டும்.

அதையே சில்லறை வியாபாரிகளும் தொகுப்புகளாக மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். மாவட்ட வேளாண்மை துறை நிா்ணயம் செய்யும் விலையை விட அதிக விலையில் விற்பனை செய்தாலோ, மாநகர பகுதிகளில் உரிய அனுமதியின்றி விற்பனை செய்தாலோ அவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையினா் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சற்குணவீதி குறுக்கு சாலை, செயின்ட் மேரிஸ் தெரு, ஞானம் நகா் நேதாஜி சாலை, அந்தோணி தெரு, ராயப்பா் தெரு, சுப்பைய்யா காலனி மற்றும் பாா்க் ரோடு, என்.பி. காலனி ஆகிய 7 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com