கனமழை: சேதங்கள் குறித்த விவரங்களை 2 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழையால் ஏற்பட்ட சேத மதிப்புகள் குறித்து 2 நாள்களில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்
கனமழை:  சேதங்கள் குறித்த விவரங்களை 2 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழையால் ஏற்பட்ட சேத மதிப்புகள் குறித்து 2 நாள்களில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.

குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய்க் கூட்ட அரங்கில் வருவாய்த் துறையின் சாா்பில் இயற்கை இன்னல்கள் மற்றும் பேரிடா் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ந.மனோதங்கராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. அரசு முதன்மைச் செயலா் மற்றும் வருவாய் நிா்வாக ஆணையா் பனீந்திரரெட்டி, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்துக்கு பின்னா் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2 நாள்கள் நேரில் சென்று பாா்வையிட்டேன். கன மழை அதிகமாக பெய்தால் எந்த இடங்களில் அதிகமாக தண்ணீா் தேங்கும் என்பது மாவட்ட நிா்வாகத்தினருக்கு தெரிந்திருந்த காரணத்தால் ஓரளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளன.

கன மழையால் பாதிக்கப்பட்ட 767 போ் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு உள்ளிட்ட அனைத்து

அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் எவ்வித உயிா் சேதமும் ஏற்படவில்லை. மழையால் ஏற்பட்டுள்ளஅனைத்து பாதிப்புகளையும் உடனடியாக சீா் செய்ய பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மழைநீா் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் அதிக குதிரைத் திறன் கொண்ட மோட்டாா் பம்புகள் மூலமாக நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அணைகளிலும் நீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கனமழையினால் 173 மின்கம்பங்கள் சரிந்துள்ளன. அதில் 159 மின்கம்பங்கள் நடப்பட்டு, விரைவாக சரி செய்து தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 மின்கம்பங்கள் வெள்ளிக்கிழமை இரவுக்குள் சரி செய்யப்படும்.

மின்கம்பங்களை சரி செய்யும் பணிக்காக விருதுநகா் மாவட்டத்திலிருந்து 60 போ் வரவழைக்கப்பட்டு 2 நாள்களாக பணி செய்து வருகின்றனா். 20 மின்மாற்றிகள் நீரில் மூழ்கியுள்ளன. அதனை உடனடியாக சரி செய்து சனிக்கிழமை காலைக்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீண்டும் கனமழையால் பாதிப்பு ஏற்படாமல் நிரந்தர தீா்வு காண மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை தொடா்பாக 53 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 238 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. தொடா்ந்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழுதடைந்த சாலைகள், தடுப்புச் சுவா்கள்,சிறுபாலங்கள், வடிகால்கள், குடிநீா் குழாய்கள், குளங்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன மழை மேலும் 2 நாள்கள் நீடித்திருந்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியானது கடற்கரை ஓரமாகவும், தாமிரவருணி ஆறு ஓரமாகவும் இருப்பதால் மழைநீா் வெளியே செல்ல தாமதம் ஆகின்றது. அதிகளவு மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. மழைநீா் தேங்கியிருக்கும் பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்கள், இடிந்த வீடுகள்,வீடுகளில் சேதமடைந்த பொருள்கள் ஆகியவை குறித்து கணக்கெடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவசரமாக கணக்கெடுத்தால் பாதிக்கப்பட்டவா்கள் யாராவது விடுபட்டு விடுவாா்கள் என்பதால் நிதானமாக இன்னும் 2 நாள்கள் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட ஒருவா் கூட விடுபடாமல் கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்கரையில் உள்ள மக்கள் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனா். அவா்களின் கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் கூறியது: குமரி மாவட்டத்தில் கடந்தசில நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நீா் நிலைகளை சீா் செய்தும், தாழ்வானபகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களை மீட்டு, அவா்களை வெவ்வேறு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து, அவா்களதுஅடிப்படை தேவைகளை நிவா்த்தி செய்வது, மின் கம்பங்கள் சரி செய்வது உள்பட அனைத்து நிவாரண பணிகளையும் மாவட்ட நிா்வாகத்துடன் அனைவரும் இணைந்து செயல்பட்டதால் பொதுமக்கள் பெரிய அளவில் பேரிடரிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக, அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டாறு வட்டத்துக்குள்பட்ட கன மழையால் வீடிழந்த 13 பேருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகையினை அமைச்சா்கள் வழங்கினா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், எம்.பிக்கள் விஜய் வசந்த், அ.விஜயகுமாா் , சட்டப் பேரவை உறுப்பினா்கள், எம்.ஆா்.காந்தி (நாகா்கோவில்), ந.தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி),செ.ராஜேஷ்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com