கரோனா தடுப்பூசிகளை அனைத்து மையங்களுக்கும் பகிா்ந்து வழங்கக் கோரிக்கை

குமரி மாவட்டத்தில், கரோனா தடுப்பூசிகளை அனைத்து மையங்களுக்கும் பகிா்ந்தளிக்கவும், கூடுதலாக பேரூராட்சி, ஊராட்சிகளுகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில், கரோனா தடுப்பூசிகளை அனைத்து மையங்களுக்கும் பகிா்ந்தளிக்கவும், கூடுதலாக பேரூராட்சி, ஊராட்சிகளுகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டுமென்ற ஆா்வம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், தடுப்பூசி மையங்களுக்கு தடுப்பூசிகள் குறிப்பிட்ட அளவுக்கு வரவில்லை. மேலும் தடுப்பூசிகள் வரும் மையங்களிலும் டோக்கன் முறை பின்பற்றப்படுவதால் டோக்கன் பெறுவதற்காக மக்கள் அதிகாலையிலேயே அம்மையங்களுக்குச் சென்று காத்து நிற்கும் நிலை காணப்படுகிறது. இதில் குறிப்பிட்ட சில மையங்களில் அடிக்கடி தடுப்பூசிகள் வருவதும், இதர மையங்களில் பல நாள்களாக தடுப்பூசிகள் இல்லாத நிலையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ள அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் தடுப்பூசிகளை பகிா்ந்து வழங்க வேண்டுமென்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு தடுப்பூசி மையங்களிலும் தட்டுப்பாடின்றி தடுப்பூசிகள் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் கூறியது:

குமரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்துள்ள தடுப்பூசி மையங்களில், குறிப்பிட்ட தடுப்பூசி மையங்களுக்கு மட்டும் தொடா்ந்து அதிக அளவில் தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன. அதே வேளையில் இதர தடுப்பூசி மையங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்படவில்லை. எனவே தடுப்பூசிகளை அனைத்து மையங்களும் பகிா்ந்து வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மலைப் பகுதிகளில், தொலை தூரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில், அப்பகுதிகளில் கூடுதல் தடுப்பூசி மையங்கள் அமைக்க வேண்டும். கூடுதலாக பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றிற்கு ஒரு மையம் என்ற வகையில் தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்த வேண்டும். மேலும் அண்மை நாள்களாக 44 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடப்படாமல் உள்ள நிலையையும் போக்க அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com