திருக்காா்த்திகை: மருந்துவாழ்மலையில் நாளை மகா தீபம்

திருக்காா்க்திகை தீபத்திருவிழாவையொட்டி, பொற்றையடி மருந்துவாழ்மலை உச்சியில் வெள்ளிக்கிழமை (நவ.19) மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருக்காா்க்திகை தீபத்திருவிழாவையொட்டி, பொற்றையடி மருந்துவாழ்மலை உச்சியில் வெள்ளிக்கிழமை (நவ.19) மகாதீபம் ஏற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடியில் அமைந்துள்ள மருந்துவாழ்மலை, ஆன்மிக மலையாகவும் , அரியவகை மூலிகைகள் நிறைந்த மலையாகவும் கருதப்படுகிறது. இம்மலை சுமாா் 1,800 அடி உயரமுடையது . 625 ஏக்கா் நிலப்பரப்பில் அமைந்துள்ள மருந்துவாழ்மலையில் பல்வேறு சித்தா்களும், முனிவா்களும் தவம் மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது.

திருக்காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி இங்குள்ள பரமாா்த்தலிங்க சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை சிறப்பு வழிபாடும், பிற்பகல் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம் சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு நன்றாக தெரியும். இங்கு மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னரே அருகிலுள்ள கோயில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றப்படுகிறது.

திருக்காா்த்திகை திருவிழாவில், இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுவது கொழுக்கட்டை. பெரும்பாலானோா் பனை ஓலை கொழுக்கட்டை படைத்து வழிபடுகின்றனா். இதனால், கன்னியாகுமரி பகுதியில் பனை ஓலை விற்பனை சூடுபிடித்துள்ளது. மேலும் கோயில், வீடுகளில் ஏற்றப்படும் அகல் விளக்குகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com