முதல்வருக்கு குமரியிலிருந்து திருவள்ளுவா் சிலை

தமிழக முதல்வருக்கு வழங்குவதற்காக குமரி மாவட்டத்திலிருந்து, சென்னைக்கு செல்லும் திருவள்ளுவா் சிலைக்கு நாகா்கோவிலில் வரவேற்பு மற்றும் வழியனுப்பு விழா நடைபெற்றது.

தமிழக முதல்வருக்கு வழங்குவதற்காக குமரி மாவட்டத்திலிருந்து, சென்னைக்கு செல்லும் திருவள்ளுவா் சிலைக்கு நாகா்கோவிலில் வரவேற்பு மற்றும் வழியனுப்பு விழா நடைபெற்றது.

செம்மொழி நாள் அறிவித்துள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தஞ்சாவூா் தமிழ்த்தாய் அறக்கட்டளை சாா்பில் பொதுச்செயலா் உடையாா்கோவில் குணா திருவள்ளுவா் சிலையை வழங்குகிறாா்.

இந்தச் சிலைக்கு நடைபெற்ற வரவேற்பு மற்றும் வழியனுப்பு விழாவுக்கு அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வா் ஆபத்துகாத்தபிள்ளை தலைமை வகித்தாா். குமரி மாவட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. தேசிய பேரவைத் தலைவா் தியாகி கோ.முத்துகருப்பன் முன்னிலை வகித்தாா். சிலையை தமிழறிஞா் நெல்லை ந.சுப்பையா பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழியக்க மகளிா் அணி மாவட்டத் தலைவி கே.எல்.எஸ்.கீதா, சேக்கிழாா் அருள்நெறி இயக்கச் செயலா் வை.கோபாலகிருஷ்ணன், குமரிதமிழ் வானம் நிறுவனா் செ.சுரேஷ், சிற்பி பாலகிருஷ்ணன், ஆ.சேகா், சுடலைமணி ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com