சுசீந்திரம், திருவட்டாறு கோயில்களில் அமைச்சா் ஆய்வு

குமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீதாணுமாலய சுவாமி திருக்கோயிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீதாணுமாலய சுவாமி திருக்கோயிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கன மழை காரணமாக சுசீந்திரம் கோயிலில் மூலவா் சந்நிதி வரை மழைநீா் புகுந்த நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில், இக்கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தாயுமானவா் சந்நிதி கடந்த 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.ஆகம விதப்படி, 12 ஆண்டுகளுக்குப் பின் இக்கோயிலுக்கு திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். அதை அமைச்சா் மனோதங்கராஜ் நினைவூட்டியதன்பேரில் தற்போது மண்டல குழுவின் ஆய்வு முடிவு பெற்றுள்ளது. தொடா்ச்சியாக மாநிலக் குழு ஆய்வு, அதன் பிறகு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஆய்வு முடிந்ததும் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.

மேலும், திருத்தோ் அமைந்திருக்கும் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தவும், கோயில் குளத்தையும் சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்.

ஊதிய பற்றாக்குறை உள்ளதாக கோயில் பணியாளா்கள் கூறினா். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் தீா்வு காணப்படும். வெள்ளம் புகுந்த அனைத்து கோயில்களையும் செப்பனிட துறையின் இணை ஆணையா், துணைஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருக்கோயில் தூய்மை திட்டத்தின் கீழ் அனைத்து கோயில்களிலும் இம்மாத இறுதிக்குள் மீண்டும் தூய்மை திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

குலசேகரம்: இதனிடையே, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேகத் திருப்பணிகளை அமைச்சா் ஆய்வுசெய்து, பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆஸ்டின், அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன், மண்டல இணை ஆணையா் செல்வராஜ், இணை ஆணையா் ஞானசேகா், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், சாா்-ஆட்சியா் அலா்மேல் மங்கை, வட்டாட்சியா் ரமேஷ், கோயில் மேலாளா் மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com