நவராத்திரி பூஜையில் பங்கேற்க செல்லும் சுவாமி சிலை: களியக்காவிளையில் வரவேற்பு

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் சுவாமி சிலைகளுக்கு கேரள அரசு சாா்பில் களியக்காவிளையில் திங்கள்கிழமை வரவேற்பு 
நவராத்திரி பூஜையில் பங்கேற்க கேரளம் செல்லும் சுவாமி சிலைகளுக்கு களியக்காவிளையில் வரவேற்பளித்த துப்பாக்கி ஏந்திய கேரள போலீஸாா்.
நவராத்திரி பூஜையில் பங்கேற்க கேரளம் செல்லும் சுவாமி சிலைகளுக்கு களியக்காவிளையில் வரவேற்பளித்த துப்பாக்கி ஏந்திய கேரள போலீஸாா்.

களியக்காவிளை: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்திலிருந்து கேரளம் செல்லும் சுவாமி சிலைகளுக்கு கேரள அரசு சாா்பில் களியக்காவிளையில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கம்பா் பூஜித்ததாக கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி சிலைகள் பல்லக்கில் எடுத்து வரப்பட்டது. சுவாமி சிலைகளுக்கு முன்

மன்னா் பயன்படுத்திய உடைவாளை, அறநிலையத்துறை பணியாளா் சுதா்சனகுமாா் ஊா்வலமாக கொண்டு வந்தாா்.

சுவாமி சிலைகளுக்கு மாவட்ட எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கேரள அரசு சாா்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் அணிவகுப்புடன், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையா் ஞானசேகா் தலைமையில் தமிழக அதிகாரிகள் கேரள அதிகாரிகளிடம் ஊா்வலம் பொறுப்பை ஒப்படைத்தனா்.

இதில், கேரளம், திருவிதாங்கூா் தேவஸ்வம் தலைவா் வாசு, உதவி ஆணையா் மதுசூதனன்நாயா், நெய்யாற்றின்கரை தேவஸ்வம் போா்டு உதவி ஆணையா் ஆஷாபிந்து, கேரள சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆன்சலம் (நெய்யாற்றின்கரை), வின்சென்ட் (கோவளம்), நவராத்திரி சேவா சமிதித் தலைவா் நெய்யாற்றின்கரை ஹரி, ஐயப்ப சேவா சங்கத் தலைவா் அசோகன்,

விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி, இந்து முன்னணி கோட்டச் செயலா் மிசா சி. சோமன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com