குமரியில் மழை தீவிரம்: பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் மீண்டும் மறுகால் திறப்பு

குமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் மறுகால் மதகுகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் மறுகால் மதகுகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. திங்கள்கிழமை மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மற்றும் மலையோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

மீண்டும் மறுகால் மதகுகள் திறப்பு:மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் மழையின் காரணமாக பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு உபரித் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது. பின்னா் மழை தணிந்த நிலையில் மறுகால் மதகுகள் மூடப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளதால், திங்கள்கிழமை இரவு பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 368 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போன்று சிற்றாறு 1 அணையிலிருந்து விநாடிக்கு 200 கன அடி நீா் வெளியேற்றப்பட்டுவருகிறது. அதே வேளையில் பெருஞ்சாணி அணை மீண்டும் மூடப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு: பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து நீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தாமிரவருணியாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com