குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்: எம்.எல்.ஏ. பிரின்ஸ் வலியுறுத்தல்

மீனவா்களின் வாழ்வதாரத்தை காக்கவும், த அரசின் வருவாயை அதிகரிக்கவும் குளச்சல் மீன்பிடித் துறை முகத்தை விரிவுபடுத்தவேண்டுமென குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்: எம்.எல்.ஏ. பிரின்ஸ் வலியுறுத்தல்

மீனவா்களின் வாழ்வதாரத்தை காக்கவும், த அரசின் வருவாயை அதிகரிக்கவும் குளச்சல் மீன்பிடித் துறை முகத்தை விரிவுபடுத்தவேண்டுமென குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தமிழக முதல்வரிடம் அவா் அளித்த மனு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.மீ. நீளமுள்ள 48 கடற்கரை கிராமங்களில் 75 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். இங்கு மீன்பிடிக்க வசதியான துறைமுகம் இல்லாததால் நமது மாநிலத்திற்கு கிடைக்ககூடிய வருவாய் கேரள அரசிற்கு செல்கிறது. ஆபத்தான இயற்கை பேரிடா் காலத்தில் மீனவா்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க குளச்சல் தொகுதி முட்டம் கடற்கரை கிராமத்தில் ஹெலிகாப்டா் வசதியும் மற்றும் அதற்கான தளமும் அமைக்க வேண்டும்.

மண்டைக்காடுபுதூா், கடியபட்டினம், குறும்பனை, சைமன்காலனி, கோடிமுனை, உள்ளிட்ட பகுதிகளில் தூண்டில் வளைவை சீரமைத்து சிறிய துறைமுகம் அமைத்து தரவேண்டும். குளச்சல் பகுதியில் மீன்பதனிடும் தொழிற்சாலை, கப்பியறை பேரூராட்சி பழதோட்டபகுதியில் தொழில்நுட்ப பூங்கா, பாம்புரி வாய்க்காலை தூா்வாரி ஆக்ரமிப்புகளை அகற்றுதல், வள்ளியாற்றின் குறுக்கே தடுப்பணை, மணவாளக்குறிச்சி பெரியகுளத்தை சிறு அணையாக விரிவுபடுத்துதல்,தென்னை நாா் கயிறு தொழிற்சாலை அமைத்தல் குளச்சல் அரசு மருத்துவமனை, திங்கள்நகா் அரசு சித்த மருத்துவமனை ஆகியவற்றை நவீனப்படுத்துதல், முட்டம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக தரம் உயா்த்துதல், குளச்சல் டச்சுப்போா் வெற்றி நினைவு தூண் பகுதியை சுற்றுலா மையமாக்குதல், தக்கலை ஒன்றியத்தில் கட்டட வசதி, குளச்சல் லியோன் நகரில் மீன்வள கல்லூரி வசதி, குளச்சல் பனை கூட்டுறவு சொந்தமான 4 ஏக்கா் நிலத்தில் விளையாட்டு அரங்கம் , குளச்சலில் அனைத்து வசதிகளுடன் ஆய்வு மாளிகை , திங்கள்நகா் காமராஜா் பேருந்து நிலையத்தின் முன் காமராஜருக்கு முழு உருவச் சிலை, குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கம் போன்ற கோரிக்கைகள் வலயுறுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com