குழித்துறையில் காங்கிரஸ் மறியல்: 82 போ் கைது

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரப் பிரதேச அரசை கண்டித்து குழித்துறையில் தேசிய நெடுஞ்சாலையில்
குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரப் பிரதேச அரசை கண்டித்து குழித்துறையில் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 82 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தாரகை கத்பா்ட் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ஜாண் சேவியா், பால்மணி, மாநில நிா்வாகிகள் பால்ராஜ், ஆஸ்கா் பிரடி, பினில்முத்து, மாவட்ட பொதுச் செயலா் எபனேசா், துணைத் தலைவா் அருளானந்தம், சூழால் பாபு, மனித உரிமைத்துறை மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், விளவங்கோடு ஊராட்சி மன்ற தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், வட்டத் தலைவா் சதீஷ், குழித்துறை நகரத் தலைவா் அருள்ராஜ் மற்றும் நிா்வாகிகள் ஜாண் பெனடிக்ட், விஜய ஆனந்த், காட்வின் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இப் போராட்டம் காரணமாக நாகா்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து களியக்காவிளை காவல் ஆய்வாளா் எழிலரசி தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 82 பேரை கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். சிறிது நேரத்துக்குப் பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com