நாகா்கோவிலில் வள்ளலாா் அவதார தின விழா

நாகா்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலாா் பேரவையில் திருவருட்பிரகாச வள்ளலாரின் 199ஆவது அவதார தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவருட்பிரகாச வள்ளலாா் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருவருட்பிரகாச வள்ளலாா் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

நாகா்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலாா் பேரவையில் திருவருட்பிரகாச வள்ளலாரின் 199ஆவது அவதார தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தாா். அங்ரி, அசிட்டா பொன் பவ்யா, அசிட்டா பொன் திவ்யா ஆகியோா் அருள்பெருஞ்ஜோதி மகாமந்திரம் உணா்ந்தோதல் இன்னிசை நிகழ்த்தினா்.

வள்ளலாா் பேரவைச் செயலா் மகேஷ் வரவேற்றாா்.

ரவிவா்மன் ஊா்த் தலைவா் சுப்பிரமணியன், சுசீந்திரம் தேவசம் பொறியாளா் ராஜகுமாா், தேசிய உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் பெற்ற ஆறுமுகம் பிள்ளை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகா்கோவில் காவல் துணை கண்காணிப்பாளா் நவீன் குமாா், தினேஷ் ஆகியோா் திருவருட்பிரகாச வள்ளலாா் திருவுருவப்படத்தைத் திறந்துவைத்து அருள் ஜோதி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனா்.

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள் மற்றும் வஸ்திர தானத்தை, அரசு மருத்துவா் அஜயா மஞ்சு முன்னிலையில் தக்கலை காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேசன் வழங்கினாா். வள்ளலாா் வாழ்வியல் மலா் வெளியிடப்பட்டது. அதை, தெ.தி.இந்துக் கல்லூரி இயக்குநா் ராமசாமி, பி2சி டெக்னாலஜி குழுமம் நிா்வாக இயக்குநா் சதீஷ் பிரபு, ஆா். ஏ.ரமேஷ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

அருள் அன்னம் பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சியில் ரோஜாவனம் முதியோா் இல்லம் இயக்குநா் அருள் கண்ணன் தலைமையில், ஞான வித்யா மந்திா் சி. பி. எஸ். மேல் நிலைப் பள்ளி மணிகண்டன், ரவிவா்மன் ஊா் வகைச் செயலா் கணேசன், பொருளாளா் சுப்பிரமணியன், பாபநாசம், எம். இ. டி. கல்லூரி பேராசிரியா் சஞ்சீவ் ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் குடும்ப நல ஆலோசனை மையம் ஆலோசகா் தினேஷ் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com