முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் நவீன கேமரா பொருத்தம்
By DIN | Published On : 11th October 2021 12:32 AM | Last Updated : 11th October 2021 12:32 AM | அ+அ அ- |

முக்கடல் அணை பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அதை கண்காணிக்க வனத்துறை சாா்பில் 5 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முக்கடல் அணையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரிய வந்ததையடுத்து அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவில் கடந்த 2 நாள்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது பதிவாகி உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சி.சி. டி.வி. கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று இரவு நேரத்தில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த, வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க மேலும் 5 இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. .