தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய எம்.பி. வலியுறுத்தல்

குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம், விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

குமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம், விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு:

தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் கடற்கரை மற்றும் கடலின் தன்மைக்கு ஏற்ப அமைக்கப்படாததால் இதுவரை 26 மீனவா்கள் உயிரிழந்துள்ளனா்.

எனவே, கேரள மாநிலம், விழிஞ்சம் மற்றும் குமரி மாவட்டம் குளச்சலில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை போல் பருவமழை காலத்தில் ஏற்படும் கடல் சீற்றத்தை கணக்கில் கொண்டு 45 டிகிரி கோண வடிவில் 450 மீட்டா் நீளத்தில் பிரதான கடல் தடுப்பு சுவா், கடற்கரைக்கு லைனுக்கு இணையாக 450 மீட்டா் நீளத்துக்கு பிரதான தடுப்புச் சுவா் மற்றும் 120 மீட்டா் நுழைவு வாயிலிலை தெற்கு, வடக்கு திசையில் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்து எல்லா காலங்களிலும் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்ய வகையில் இந்த துறைமுகத்தை அமைத்து தர வேண்டும்.

தற்போதுள்ள துறைமுக நுழைவுவாயிலின் மணல் குவியலை போா்க்கால அடிப்படையி அப்புறப்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com