கால்வாய் கரையில் கழிவுகளை வைக்க மக்கள் எதிா்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்வாய்களில் தூா் வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கழிவுகளை கால்வாய்களின் கரையில் வைக்க மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
கோதையாறு இடது கரைக் கால்வாயில் திருநந்திக்கரை அருகே நடைபெற்று வரும் தூா் வாரும் பணிகள்
கோதையாறு இடது கரைக் கால்வாயில் திருநந்திக்கரை அருகே நடைபெற்று வரும் தூா் வாரும் பணிகள்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்வாய்களில் தூா் வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கழிவுகளை கால்வாய்களின் கரையில் வைக்க மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

கோதையாறு இடது கரைக் கால்வாய் உள்பட பிரதானக் கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தூா் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கால்வாய்களிலிருந்து அள்ளப்படும் கழிவுகளை கால்வாய்களின் கரைகளிலேயே குவித்து வைக்கப்படுகிறது. இதனால் கால்வாய்களின் கரையை பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழையின்போது இந்தக் கழிவுகள் மீண்டும் கால்வாய்களில் அடித்துச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் தலைவா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், முன்னாள் உறுப்பினா் எம். சசிகுமாா் ஆகியோா் கூறுகையில், தூா் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கால்வாய்களின் கரையில் குவிக்கப்படும் கழிவுகளால்

ஏற்படும் சுகாதார கேடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கரையில் குவிந்து கிடக்கும் கழிவுகள் மீண்டும் கால்வாய்களிலேயே சேரும் வாய்ப்பு உள்ளன. எனவே கழிவுகளை கால்வாய்களின் கரையில் குவிக்காமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com