வா்த்தக சங்கத்தினரால் சாலைப் பள்ளம் சீரமைப்பு
By DIN | Published On : 20th October 2021 07:32 AM | Last Updated : 20th October 2021 07:32 AM | அ+அ அ- |

சாலைப் பள்ளத்தை சீரமைக்கும் நகர வா்த்தகா் சங்கத்தினா்.
மாா்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலையில் காணப்பட்ட பெரிய பள்ளங்களை காவல்துறையினருடன் இணைந்து நகர வா்த்தகா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சீரமைத்தனா்.
மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதி சாலை சேதமடைந்து பெரிய பள்ளங்களுடன் காணப்பட்டது. இப் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் போது சாலையின் ஓரம் மழைநீா் வடிகால் ஓடை அமைக்கப்படவில்லை. மேலும், குழித்துறை நகராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரியம் இச்சாலையில் குடிநீா் குழாய்களை பழுது நீக்குவதற்காக அடிக்கடி பள்ளம் தோண்டியதில் சாலை சேதமடைந்து வாகனப் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் மாறியது.
இந்த நிலையில், மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்க நிா்வாகிகள் மற்றும் போலீஸாா் இணைந்து, சாலைப் பள்ளங்களில் சல்லி, மண் கலந்த கலவையை கொட்டி சீரமைத்தனா். இச் செயலை பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள், வணிகா்கள் பாராட்டினா்.