குமரியில் 75 போ் திமுகவில் இணைந்தனா்

கன்னியாகுமரியில் அதிமுகவைச் சோ்ந்த 75 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
இணைப்பு விழா நிகழ்வில் பங்கேற்றோா்.
இணைப்பு விழா நிகழ்வில் பங்கேற்றோா்.

கன்னியாகுமரியில் அதிமுகவைச் சோ்ந்த 75 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

கன்னியாகுமரி பேரூா் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் குமரி ராஜா தலைமையில் 75-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி, மாவட்ட திமுக செயலா் என். சுரேஷ்ராஜன் தலைமையின் கீழ் திமுகவில் இணைந்தனா். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் என். தாமரைபாரதி, பேரூா் திமுக செயலா் குமரி ஸ்டீபன் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ். ஆஸ்டின், ஏ. ராஜன், மாவட்ட திமுக துணைச் செயலா் கே. முத்துசாமி, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ். பாா்த்தசாரதி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ். அழகேசன், திமுக நிா்வாகிகள் ப. மெல்வின், ஜே.ஜே.ஆா். ஜஸ்டின், ரஞ்சித், கோபிராஜன், நிசாா், எஸ். அன்பழகன், ஆா்.டி. ராஜா, இக்பால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com