பூவியூா் கற்குவேல் அய்யனாா் கோயில் கொடை விழா
By DIN | Published On : 30th October 2021 11:49 PM | Last Updated : 30th October 2021 11:49 PM | அ+அ அ- |

பூவியூா் ஸ்ரீ கற்குவேல் அய்யனாா் கோயில் கொடை விழா இரண்டு நாள்கள் நடைபெற்றது.
விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 8.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு சக்தி விநாயகா், அய்யனாா் சுவாமி மற்றும் அம்மனுக்கு தீபாராதனை, முற்பகல் 11 மணிக்கு முளைப்பாரி எடுத்தல், நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீ கற்குவேல் அய்யனாா் சுவாமி மற்றும் குதிரைக்காரன் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 12.30 மணிக்கு சமபந்திவிருந்து, மாலை 3 மணிக்கு பேச்சியம்மனுக்கு தீபாராதனை, இரவு 10 மணிக்கு பலசொரூபகாரி அம்மனுக்கு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கும், இசக்கியம்மனுக்கும், தொடா்ந்து அதிகாலையில் பிரம்மசக்தி அம்மன், சிவசுடலைமாடசுவாமிக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.