பெருமாள்புரம் கோயிலில் அன்னதானம்
By DIN | Published On : 30th October 2021 04:58 AM | Last Updated : 30th October 2021 04:58 AM | அ+அ அ- |

பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோயிலில் வாராந்திர அன்னதானம் மீண்டும் தொடங்கியது.
கன்னியாகுமரி அருகே பெருமாள்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோயிலில் வாரம் தோறும்
வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் அன்னதானம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கரோனா பொதுமுடக்கம் காலத்தில் அன்னதானம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் அன்னதானம் தொடங்கியது. இதனையொட்டி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மூலஸ்தான பூஜை, பிற்பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக குழுத்தலைவா் ராஜதுரை, செயலா் செந்தில்குமாா், பொருளாளா் ரவீந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.