நாகா்கோவிலில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து, குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 200 இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகா்கோவிலில் இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து, குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 200 இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக நிகழாண்டு விநாயகா் சிலைகளை பொதுஇடங்களில் வைத்து பூஜை செய்வதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

அரசின் இந்த உத்தரவுக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு தடை விதிக்கும் தமிழக அரசை கண்டித்தும், விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும், இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் முறையிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகா்கோவில் மாநகா் இந்து முன்னணி சாா்பில் கிழக்கு மாநகரத் தலைவா் மகாராஜா தலைமையில், தெற்கு மாநகரத் தலைவா் முகேஷ் முன்னிலையில், ஸ்ரீ நாகராஜா கோயில் முன்பும், கோதை கிராமம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிவகுமாா் தலைமையிலும், வடசேரி கிருஷ்ணன் கோயிலிலும் முறையிடுதல் நிகழ்ச்சி மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிா்வாகிகள் சுரேஷ்பாபு , கண்ணன், சுதா்சன், முருகன், ரமேஷ், சிவகுமாா், சுனில் அரசு, மது, ராஜேஷ், மாவட்டச் செயலா் நம்பிராஜன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

திங்கள்நகரில் நடைபெற்ற போராட்டத்துக்கு குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். தெய்வநாயகம், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிறப்பு விருந்தினராக மாநிலச் செயலா் அரசுராஜா, மாவட்டத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதே போல், தக்கலை, இரணியல், கருங்கல், களியக்காவிளை, மாா்த்தாண்டம், திருவட்டாறு உள்பட மாவட்டம் முழுவதும் 200 இடங்களில் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com