கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: செப். 6இல் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கால்நோய் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை (செப். 6) தொடங்குகிறது.

குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கால்நோய் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை (செப். 6) தொடங்குகிறது.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடுவது குறித்து, கால்நடை மருத்துவா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் ஆட்சியா் கூறியது: குமரி மாவட்டத்தில் 2ஆவது சுற்று கால்நோய் மற்றும் வாய்நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி பணி வருகிற திங்கள்கிழமை (செப். 6) தொடங்கி 21 நாள்கள் நடைபெற உள்ளது.

கால்நோய் மற்றும் வாய்நோய் பெரும்பாலும் இரட்டை குளம்புகள் கொண்ட கலப்பின கால்நடைகளை தாக்கி கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும் நோயாகும். இந்நோயை தடுப்பூசி மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

நிகழாண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் முதல் சுற்று நடத்தப்பட்டுள்ளது. தற்போது 2ஆம் சுற்றாக குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தகுதியுள்ள மாட்டினங்களுக்கு (பசுக்கள், காளைகள், எருமைகள்) தடுப்பூசி பணி நடைபெற உள்ளது.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்ந்த கால்நடை உதவி மருத்துவா், கால்நடை ஆய்வாளா், கால்நடை பராமரிப்பு உதவியாளா் ஆகியோரை கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கால்நோய் மற்றும் வாய்நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

கால்நடை வளா்ப்போா் அரசின் இச்சேவையை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) ரெ.சுவாமிநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com