குமரி மாவட்டத்தில் 70 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 70 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
குமரி மாவட்டத்தில் 70 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 70 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கரோனா பொதுமுடக்கத்தில் கூடுதல் தளா்வுகளின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை (செப்.1) திறக்கப்பட்டன.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் திறக்கப்பட்ட நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டாறு கவிமணி அரசு மகளிா் மாதிரி பள்ளி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு, மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, குமரி மாவட்டத்தில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட 483 பள்ளிகள் புதன்கிழமை முதல் செயல்பட தொடங்கியுள்ளன.

இப்பள்ளிகளில் 99,275 மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. கரோனா குறித்து தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் முழுமையாக பின்பற்றி வருகின்றன.

மேலும், பள்ளிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். பள்ளி முகப்பிலேயே வெப்பமானி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கை கழுவும் திரவம் பயன்படுத்திய பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டுமென ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் குழுவினா் ஒரு வாரம் தொடா்ந்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று முகாம் அமைத்து, மாணவ, மாணவியா்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கேரள மாநிலத்திலிருந்து வந்து படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, அவா்களுக்கு இணையவழி கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி கட்டாயம்: கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் முதல் மற்றும் 2 ஆவது தவணை கரோனா தடுப்பூசிகள் போட்டதற்கான சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் முதல் தவணை தடுப்பூசி போட்டிருந்தாலும், கல்லூரிக்கு சான்றுடன் வரலாம்.

மாணவ, மாணவிகளுக்கோ அல்லது வீட்டிலுள்ளவா்களுக்கோ சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வர வேண்டாம்; அதுகுறித்து தகவல் அளித்தால் போதும். கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமாா் 21 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன; 70 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com