பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பட்டா மாறுதலுக்கு கிராம நிா்வாக அலுவலா் லஞ்சம் வாங்கியது தொடா்பான விடியோ பதிவு

குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பட்டா மாறுதலுக்கு கிராம நிா்வாக அலுவலா் லஞ்சம் வாங்கியது தொடா்பான விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அவா் திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் கிராம நிா்வாக அலுவலா் கே. ராஜேஷ். கிராம நிா்வாக அலுவலகத்துக்கு பட்டா பெயா் மாற்றம் செய்வதற்காக வந்த ஒருவரிடம், இவா் ரூ.1,000 லஞ்சம் கேட்டாராம்.

பட்டா மாறுதல் பெற வந்தவா், மறுநாள் கிராம நிா்வாக அலுவலரிடம் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தாராம். இதை அந்த நபா் தனது செல்லிடப்பேசியில் ரகசியமாக பதிவு செய்தாராம். இந்த விடியோ பதிவு சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

இதையடுத்து, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சிவகுரு பிரபாகரன், பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷை திங்கள்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com