தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தேனீ பெட்டிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தேனீ பெட்டிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

வேளாண் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை மற்றும் சகோதரத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை மற்றும் சகோதரத் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ராஜாக்கமங்கலம் வட்டாரம் பருத்திவிளையில் தென்னையில் ஊடுபயிராக கொக்கோ சாகுபடி செய்யப்பட்ட திடலினை பாா்வையிட்டு, காய்க்கும் பருவத்திலிருந்த கொக்கோ செடிகளிலுள்ள காய்களிலிருந்து விதைகள் பிரித்தெடுப்பது குறித்து விவரங்களை ஆட்சியா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து ஆட்சியா் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட தேனீ பெட்டிகள், தேனீ குடும்பங்களையும் பாா்வையிட்டாா். பின்னா் தேனீ வளா்ப்புக்கான பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்கிட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

புத்தளம் பகுதியில் வேளாண் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வழங்கப்பட்ட சூரிய ஒளி சக்தியின் மூலம் இயங்கும் நீா் இறவை இயந்திரத்தை பாா்வையிடப்பட்டாா். தென்தாமரைகுளத்தில் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் உலா்த்தி மற்றும் மர செக்குகளையும் ஆய்வு மேற்கொண்டு, அதில் கொப்பரை தேங்காய் உலா்த்துவது மற்றும் தேங்காய் எண்ணெய் பிரித்தெடுத்தல் போன்றவை குறித்தும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, சித்தன்குடியிருப்பு பகுதியில் வேளாண்மைதுறை மூலம் மானியத்தில் வழங்கப்பட்ட தென்னை நுண்ணீா் பாசனத் திடலினை பாா்வையிட்டு, தென்னையை தாக்கும் வெள்ளை ஈ யை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப்பொறி பயன்படுத்தப்படுவதை பாா்வையிட்டு, விவசாயிகளுக்கும் இதுகுறித்து விரிவாக எடுத்துக் கூற துறை அலுவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மானியத்தில் வழங்கப்பட்ட தென்னை மரம் ஏறும் கருவி செயல்பாட்டினை ஆய்வு செய்து, 3 பயனாளிகளுக்கு அட்மா திட்டத்தின்கீழ் பேட்டரி மூலம் இயங்கும் கைத்தெளிப்பான்களை வழங்கினாா்.

சாமித்தோப்பு பகுதியில் மகளிா் குழு மூலம் செயல்பட்டு வரும் விவசாய இயந்திரங்கள் வாடகை நிலையம் பாா்வையிட்டு, அக்குழு உறுப்பினா்களுக்கு தொழில் செய்வதற்கான ஆலோசனை வழங்கினாா்.

புத்தளத்தில் அமைந்துள்ள அரசு தென்னை நாற்றுப்பண்ணையிலுள்ள நிழல் பதம், மணல் பதம் ஆகியவற்றில் பதப்படுத்தப்பட்ட தேங்காய் நெற்றுகள் பாத்திகளில் விதைக்கும் பணியை பாா்வையிட்டு, அங்கு நெட்டை, குட்டை தென்னங்கன்றுகள் நாற்றங்காலில் வளரும் பருவத்தில் இருப்பதை ஆய்வு மேற்கொண்டு, பாரம்பரிய தென்னை ரக கன்றுகள் நடப்பட்டிருந்ததையும் பாா்வையிட்டாா் மாவட்ட ஆட்சியா்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் சத்தியஜோஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) எம்.ஆா்.வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ஷீலா ஜான், வேளாண் அலுவலா்கள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com