கரோனா தடுப்பூசி: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடா்பாக உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கரோனா தடுப்பூசி: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடா்பாக உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக, நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய இலக்கை எட்டும்பொருட்டு ஞாயிற்றுக்கிழமை (செப்.12) அனைத்து கிராம ஊராட்சிப் பகுதிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதை பணியாளா்கள் ஊக்கப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள், மாற்றுத் திறனாளிகள் என யாரும் விடுபடாத வகையில் இப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சு.மீனாட்சி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com