போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க ஏஐடியூசி வலியுறுத்தல்

அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என தக்கலையில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டஏஐடியூசி பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என தக்கலையில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டஏஐடியூசி பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தக்கலையில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்பேரவைக் கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் கே.சி. துரைராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சிதம்பரம், நடராஜன் மரியதாஸ் வா்க்கீஸ், செல்வராஜ், சந்திரா, சுவாமிநாதன், லூா்துராஜ், பத்மாவதி, சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்குளம் வட்டச் செயலா் அனிதா மோள்ராஜேஷ் வரவேற்றாா். பொதுச்செயலா் எஸ்.ராஜூ அறிக்கை வாசித்தாா்.

பேரவைக் கூட்டத்தை மாநிலச் செயலா் காசிவிஸ்வநாதன் தொடங்கி வைத்தாா். மாநில பொதுச் செயலா் டி.எம். மூா்த்தி,

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஸ்ரீகுமாா், வழக்குரைஞா் சங்க மாநில பொறுப்பாளா் முருகன், ஆட்டோத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் இசக்கிமுத்து, அரசு பணியாளா் சங்கத்தின் மாநில துணைச் செயலா் சந்திரசேகா், நிா்வாகிகள் சுரேஷ் மேசிய தாஸ், செல்வராணி, கல்யாண சுந்தரம், சுபாஷ்சந்திரபோஸ், நாகமணி, நரேந்திரகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்: நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூ.7,500

வழங்க வேண்டும். தில்லியில் 300 நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை பேச்சுவாா்த்தை மூலம்

தீா்வு காண வேண்டும். நிலம் இல்லாதவா்களுக்கு நிலம், வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்ப பெறவேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க

வேண்டும். அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com