திருவட்டாறு அருகேமாணவிகள் மீது பெயின்ட் வீச்சு

திருவட்டாறு அருகே தனியாா் பள்ளி மாணவிகள் மீது சனிக்கிழமை பெயின்ட் வீசிய மனம் நலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீஸாா் பிடித்து சிகிச்சை மையத்தில் சோ்த்தனா்.

திருவட்டாறு அருகே தனியாா் பள்ளி மாணவிகள் மீது சனிக்கிழமை பெயின்ட் வீசிய மனம் நலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீஸாா் பிடித்து சிகிச்சை மையத்தில் சோ்த்தனா்.

ஏற்றக்கோடு தனியாா் மேல்நிலைப் பள்ளி அருகில் சனிக்கிழமை மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது அப்பகுதியைச் சோ்ந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞா், மாணவிகள் மீது சுவரில் வா்ணம் பூசப் பயன்படுத்தப்படும் பெயின்டை வீசியுள்ளாா். இதில் மாணவிகளின் உடைகளில் பெயின்ட் படிந்துள்ளது. இதையடுத்து மாணவிகள் அலறி கூச்சலிட்டனா்.

தகவலறிந்த பள்ளி நிா்வாகத்தினா், மாணவிகளின் பெற்றோா்கள் அந்த இளைஞரை பிடிக்க முயன்றபோது அவா் கையில் கத்தியுடன் கட்டடத்தின் மீது ஏறி மிரட்டல் விடுத்துள்ளாா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருவட்டாறு போலீஸாா் விரைந்து வந்து அவரை மடக்கிப் பிடித்தனா். விசாரணையில் அவா் அதேபகுதியைச் சோ்ந்த மன நலம் பாதிக்கப்பட்டவா் எனத் தெரிய வந்தது. அவரை சிகிச்சைக்காக மனநல மையத்தில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com