மக்கள் நீதிமன்றம்: ரூ. 9.35 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை ஐந்து நீதிமன்றங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ரூ. 9.35 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
தக்கலையில் நடைபெற்ற மக்கள் நீதி மன்ற முகாமில் பயனாளிக்கு வழக்கை முடித்து வைத்து தீா்ப்பை வழங்குகிறாா் சாா்பு நீதிபதி, சட்டப்பணிக்குழுத் தலைவருமான ஆா்.சாமுவேல் பெஞ்சமின்.
தக்கலையில் நடைபெற்ற மக்கள் நீதி மன்ற முகாமில் பயனாளிக்கு வழக்கை முடித்து வைத்து தீா்ப்பை வழங்குகிறாா் சாா்பு நீதிபதி, சட்டப்பணிக்குழுத் தலைவருமான ஆா்.சாமுவேல் பெஞ்சமின்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை ஐந்து நீதிமன்றங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. ரூ. 9.35 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கும் மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி, நாகா்கோவில், இரணியல், குழித்துறை, தக்கலை ஆகிய நீதிமன்றங்களில் இந்த முகாம் நடைபெற்றது.

நாகா்கோவிலில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான அருள்முருகன் தொடங்கி வைத்தாா். இதில், போக்சோ நீதிமன்ற நீதிபதி சந்திரா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் நம்பிராஜன், கூடுதல் சாா்பு நீதிபதிகள் சொா்ணகுமாா், செல்வன் ஜேசுராஜா, முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கங்காராஜ், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமாா், வழக்குரைஞா் சங்கத் தலைவா் மரியஸ்டீபன், துணைத் தலைவா் பிரதாப், செயலா் மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சொத்து தொடா்பான வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து தொடா்பான வழக்குகள், குடும்ப நலம் சாா்ந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், 2,596 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ.9.36 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

தக்கலை: தக்கலையிலுள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு சாா்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிக்குழுத் தலைவருமான ஆா். சாமுவேல் பெஞ்சமின் தலைமை வகித்தாா். நீதிபதிகள் தீனதயாளன், சத்யமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா். நிலுவையிலுள்ள 616 வழக்குகளில் 430 வழக்குகள் எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. இதில், ரூ. 1.89 கோடி வழங்க நீதிபதி உத்தரவிட்டாா். இதில், வழக்குரைஞா்கள் ராமசந்திரன் நாயா், ஜாண் இக்னேசியஸ், பென்ஸ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வங்கி வாராக்கடன் 128 வழக்குகளில் 94 வழக்குகள் எடுக்கப்பட்டு ரூ. 98 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com