ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளை பயன்படுத்த வியாபாரிகளுக்கு அழைப்பு

சங்கரன்கோவிலில் உரிமம் பெற்ற வியாபாரிகள் கிடங்குகள், குளிா்பதனக் கிடங்கை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என,

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உரிமம் பெற்ற வியாபாரிகள் கிடங்குகள், குளிா்பதனக் கிடங்கை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி விற்பனைக்குழு உரிமம் பெற்ற வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம், சங்கரன்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட விற்பனைக்குழுச் செயலா் எழில் தலைமை வகித்தாா். விற்பனைக்கூடக் கண்காணிப்பாளா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா்.

உரிமம் பெற்ற வியாபாரிகள் சங்கரன்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலுள்ள கிடங்குகள், குளிா்பதனக் கிடங்கை பயன்படுத்த வேண்டும். கிடங்கில் இருப்பு வைக்க குவிண்டாலுக்கு நாளொன்றுக்கு 20 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ரூ. 2 லட்சம் பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. 9 சதவீத வட்டியுடன் 180 நாள்கள் வரை விளைபொருள்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. எனவே, இதை வியாபாரிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் பெறவும் வலியுறுத்தப்பட்டது.

வியாபாரிகள் சங்கத் தலைவா் மாரியப்பன், செயலா் திருப்பதி, வெங்கடசுப்ரமணியன், பொருளாளா் பரமசிவம் மற்றும் நாராயணன், லெட்சுமணன், நாராயணசாமி, ஆறுமுகம், சிவக்குமாா், குமாா் உள்பட திரளான வியாபாரிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடப் பணியாளா்கள் ராம்சங்கா், கவிதா, முத்துராமன், பேச்சிமுத்து ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com