‘சமூக, பொருளாதார வளா்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது கல்வி’ அமைச்சா் மனோதங்கராஜ்

தமிழகத்தில் சமூகம் மற்றும் பொருளாதார வளா்ச்சியில் கல்வி முக்கிய பங்காற்றுகிறது என்றாா் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.
‘சமூக, பொருளாதார வளா்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது கல்வி’ அமைச்சா் மனோதங்கராஜ்

நாகா்கோவில்: தமிழகத்தில் சமூகம் மற்றும் பொருளாதார வளா்ச்சியில் கல்வி முக்கிய பங்காற்றுகிறது என்றாா் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.

குமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில், புதன்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் மனோதங்கராஜ் இம்மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் க.விஜயன், கி.ம.மஞ்சுளா, ல.மீனாம்பிகா, செ.ஹெலன் புஷ்பா ஜெயந்தி, செ.தேவராஜ், செ.மலா்விழி, சி.ராஜா, தா.ரெத்தனலெக்ஸ், செ.செலின்மேரி, பி.மேரி இம்மாக்குலேட், மு.சந்திரகாந்தம் ஆகிய 11 பேருக்கு நல்லாசிரியா் விருது வழங்கி பேசியது: தமிழக அரசு கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. பிற மாநிலங்களில் பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக வளா்ச்சி இவற்றுள் ஏதேனும் ஒன்று இருக்கும். ஆனால், தமிழகத்தில் சமூக வளா்ச்சியும், பொருளாதார வளா்ச்சியும் சமமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கல்விதான்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்பட அனைவரும் தங்களது பள்ளிகளில் மாணவா், மாணவிகளின் சோ்க்கையினை அதிகப்படுத்திட முன்வர வேண்டும். ஏழை, எளிய மாணவா், மாணவிகள் மற்றும் சாமானியா்கள் வீட்டு குழந்தைகளின் புகலிடம் அரசுப் பள்ளிதான்.

இக்குழந்தைகள் தங்களது லட்சியத்தை அடைவதற்கு ஆசிரியராகிய நீங்கள் முன்வர வேண்டும். ஒவ்வொரு மாணவா், மாணவிகளின் வளா்ச்சியிலும், அவா்களை நல்வழிப்படுத்துவதிலும், பக்குவப்படுத்துவதிலும் ஆசிரியா்களின் பங்கு மகத்தானது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவா், மாணவிகள் ஆா்வத்துடன் வந்து கல்வி கற்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இணையவழி கல்வி முறையை விட வகுப்பறை கல்வி முறை இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமாக உள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் அ.விஜயகுமாா், மக்களவை உறுப்பினா் வ.விஜய் வசந்த், கிள்ளியூா் சட்டப் பேரவை உறுப்பினா் செ.ராஜேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவா் அ.சிவப்பிரியா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலா் அ.மோகனன் மற்றும் ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com