தென்காசி மாவட்டத்தில் 1,328 வாக்குச்சாவடிகள்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் 1,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் தெரிவித்தாா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 1,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட ஊராட்சிக்கு உள்பட்ட 14 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும், 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 144 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும் 221 கிராம ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கும், 1,905 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கும் 2 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

இதில், 3,69,438 ஆண்கள், 3,85,940 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 24 போ் என, 7 லட்சத்து 55ஆயிரத்து 402 போ் வாக்களிக்கவுள்ளனா்.

வேட்புமனுக்கள் இம்மாதம் 22ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் தோ்தல் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களில் பெறப்படும். மனுக்கள் மீது 23ஆம் தேதி ஆய்வு செய்யப்படும். மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 25.

மாவட்டத்தில் 1,328 வாக்குச்சாவடிகள் உள்ளன. முதல்கட்ட வாக்குப் பதிவு அக். 6இல் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூா், மேலநீலிதநல்லூா், வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் 754 வாக்குச்சாவடிகளிலும், 2ஆம் கட்ட வாக்குப் பதிவு அக். 9இல் கடையநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஊராட்சி ஒன்றியங்களில் 574 வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக். 12இல் நடைபெறும்.

மாவட்டத்தில் தோ்தல் முடியும் நாளான அக். 16 வரை, ஊரகப் பகுதிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அருகே 5 கிமீ சுற்றளவு வரை நடத்தை விதிகள் அமலில் இருக்கும். நடத்தை விதிகளை அனைவரும் கடைப்பிடித்து தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com