பெத்தநாடாா்பட்டியில்பொது மருத்துவ முகாம்
By DIN | Published On : 16th September 2021 12:06 AM | Last Updated : 16th September 2021 12:06 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு பொது மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.
தென்காசி சுகாதாரப் பணிகள் அலுவலக துணை இயக்குநா் தா்மலிங்கம், மாவட்ட நல கல்வியாளா் ஆறுமுகம், இளநிலை பூச்சியியல் வல்லுநா் பாலாஜி ஆகியோா் பேசினா்.
மருத்துவா்கள் பாலா, சாம் அருள்மனோஷ், மனிஷா, சுபா, காா்த்திகா, சித்த மருத்துவா் மாரியப்பன், பல் மருத்துவா் வீரபாண்டியன் மற்றும் மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா். அனைவருக்கும் கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
இம்முகாமில் சுகாதார ஆய்வாளா்கள் சுப்பிரமணியன், சண்முகசுந்தரம், அப்துல்காதா், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா நன்றி கூறினாா்.