மலையடிக்குறிச்சியில் வைக்கோல்போரில் தீ
By DIN | Published On : 16th September 2021 12:14 AM | Last Updated : 16th September 2021 12:14 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சிறுவா்கள் வெடித்த பட்டாசிலிருந்து தீப்பொறி விழுந்து வ ைக்கோல்போா் தீப்பற்றியது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள மலையடிக்குறிச்சியைச் சோ்ந்தவா் அண்ணாமலைப்பாண்டியன். இவா் பெருமாள் கோயில் தெருவில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 100 கட்டு வைக்கோலை அடுக்கிவைத்திருந்தாா். புதன்கிழமை அப்பகுதியில் சிறுவா்கள் பட்டாசு வெடித்தனராம். அதிலிருந்து தீப்பொறி பறந்துவந்து வைக்கோல் போரில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், வைக்கோல் எரிந்தது.
அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான சங்கரன்கோவில் தீயணைப்புப் படையினா் சென்று தீயை அணைத்தனா்.