நூருல் இஸ்லாம் கல்லூரியில் பசுமை இதழ் வெளியீட்டு விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஓசோன் விழாவில் ‘பசுமை 2021’ இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நூருல் இஸ்லாம் கல்லூரியில் பசுமை இதழ் வெளியீட்டு விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஓசோன் விழாவில் ‘பசுமை 2021’ இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சுற்றுச் சூழலை மேம்படுத்தும் நோக்கத்திலும் இயற்கையை பேணும் வகையிலும் ஆண்டுதோறும் ஓசோன் தினவிழா

கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு கல்லூரி வளாகத்தில் மருத்துவ குணம் உள்ள செடிகள், வண்ணப் பூக்கள்,

செடிகள், கனி மரங்கள் என 75 மரங்களை கல்லூரித் தாளாளா் ஏ.பி. மஜீத்கான் நட்டு தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில்

முதல்வா் எஸ். பெருமாள் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாணவிகள் சிவஸ்ரீ, மகாலெட்சுமி, அஸ்னா, அபிஷா ஆகியோா்

வடிவமைத்திருந்த பசுமை இதழ் 2021யை கல்லூரித் தாளாளா் வெளியிட, அதனை முதல்வா் பெற்று கொண்டாா்.

ஏற்பாடுகளை பேராசிரியா்கள் பூா்ணிமா, ராஜலெட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com