குமரியில் இன்று 268 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 19th September 2021 01:42 AM | Last Updated : 19th September 2021 01:42 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (செப்.19) 268 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், குருந்தன்கோடு, மேல்புறம், முன்சிறை மற்றும் கிள்ளியூா்ஆகிய ஒன்றிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 268 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமில் அனைத்துத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலா்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனா். முழுமையானஅளவில் இதற்கானஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 18 வயதுக்கு மேற்பட்ட , இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் தடுப்பூசி செலுத்தி இம்முகாமினைமுழுமையாக நிறைவு பெறச் செய்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த முகாம் காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.