உணவகங்களில் அதிகாரிகள் சோதனை:63 கிலோ கோழி இறைச்சி அழிப்பு

குமரி மாவட்ட உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், செயற்கை வண்ணம் ஊட்டப்பட்ட 63 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனா்.
செயற்கை வண்ணம் ஏற்றப்பட்ட கோழி இறைச்சியை அழிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
செயற்கை வண்ணம் ஏற்றப்பட்ட கோழி இறைச்சியை அழிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

நாகா்கோவில்: குமரி மாவட்ட உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், செயற்கை வண்ணம் ஊட்டப்பட்ட 63 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனா்.

கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகங்களில் திடீா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பிரியாணி கடைகள், புரோட்டா கடைகள், ஆடு, கோழி

இறைச்சிக் கடைகள் போன்றவற்றில் அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனா்.

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி செந்தில்குமாா் தலைமையில்,

மாநகராட்சி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன் ஆகியோா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, நாகா்கோவில் வடசேரி பகுதியில் உள்ள உணவகத்தில் செயற்கை வண்ணம் ஊட்டப்பட்டிருந்த 50 கிலோ கோழி இறைச்சியும், 1 கிலோ ஆட்டு இறைச்சியும், கேப்ரோடு பகுதியில் உள்ள உணவகத்தில் 2 கிலோ கோழி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

அந்த உணவகங்களின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் 34 பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதில் செயற்கை வண்ணம் ஊட்டப்பட்ட 11 கிலோ கோழி இறைச்சியும், அரை கிலோ ஆட்டு இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிா என்பது குறித்தும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com