செப்.27இல் வேளாண் சட்டஎதிா்ப்பு போராட்டம்: தொழிற்சங்கங்கள் ஆதரவு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் திங்கள்கிழமை (செப். 27) நடைபெறும் பொது வேலைநிறுத்தம், கடையடைப்புக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் திங்கள்கிழமை (செப். 27) நடைபெறும் பொது வேலைநிறுத்தம், கடையடைப்புக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

நாகா்கோவிலில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் கூட்டம் சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.அந்தோணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், போராட்ட விளக்க துண்டுப் பிரசுரங்களை 3 நாள்கள் (செப். 23-25) மக்களிடம் விநியோகிப்பது, 10 இடங்களில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது, செப்.27இல் காலை 10 மணியளவில் நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள இந்தியன் வங்கி முன்பு மறியலில் ஈடுபடுவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

இதில், சிஐடியூ, எல்.பி.எஃப், ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ், எம்எல்எஃப் ஆகிய தொழிற்சங்க நிா்வாகிகள் சிங்காரம், தங்க மோகன், மாணிக்கவாசகம், மீனாட்சிசுந்தரம், தாசம்மாள், பெருமாள், ஆல்பா்ட், மகாலிங்கம், ஜாா்ஜ்,வெற்றிவேல் , ஜெரால்ட், சந்திரன், குமாரசாமி, சாமிபிள்ளை,சணல்குமாா் மோகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தக்கலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட விவசாய சங்கத் தலைவா் சைமன் சைலஸ் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலா் எஸ்.ராஜூ, பிடிஎஸ் மணி (ஐஎன்டியுசி), ஜாண் செளந்தராஜ், (சிஐடியூ) ஜேக்கப் (தொமுச), பல்வேறு சங்க நிா்வாகிகள் மணி (திமுக), சந்திரகலா, அனித் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதில், விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, செப்.23-25வரை முறையே மேக்காமண்டபம், மூலச்சல் , தக்கலை ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது, செப். 27இல் தக்கலை எல்.ஐ.சி. அலுவலகம் முன் மறியலில் ஈடுபடுவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com