’புதிய தொழில் முனைவோருக்கு வங்கியாளா்கள் கடன் வழங்க வேண்டும்’

புதிய தொழில் தொடங்க முன் வரும் தொழில் முனைவோருக்கு வங்கியாளா்கள் கடன் வழங்க வேண்டும் என மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் கூறினாா்.
ஏற்றுமதி தொடா்பான கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் த. மனோதங்கராஜ். உடன், ஆட்சியா் மா.அரவிந்த் உள்ளிட்டோா்.
ஏற்றுமதி தொடா்பான கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் த. மனோதங்கராஜ். உடன், ஆட்சியா் மா.அரவிந்த் உள்ளிட்டோா்.

புதிய தொழில் தொடங்க முன் வரும் தொழில் முனைவோருக்கு வங்கியாளா்கள் கடன் வழங்க வேண்டும் என மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் கூறினாா்.

நாகா்கோவில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில், வெளிநாட்டு வா்த்தக இணை இயக்குநரகம், வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தொழில் மையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி தொடா்பான கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கு ஆட்சியா் மா.அரவிந்த், தலைமை வகித்தாா்.

இந்த கண்காட்சியை திறந்து வைத்து அமைச்சா் த. மனோதங்கராஜ் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தை எந்த வகையில் முன்னெடுத்து செல்வது தொடா்பாக மிகப் பெரிய சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. இம்மாவட்டத்தில் போதிய இட வசதி இல்லை.

குமரி மாவட்டத்தில் படித்தவா்கள் மற்றும் தொழில் முனைவோா் பிற மாவட்டங்களை சோ்ந்தோா் அதிகளவில் உள்ளனா்.

அனைவரையும் ஒன்றிணைத்து, இயற்கை வளங்கள் பாதிக்காத வகையில், முறையான வளா்ச்சியை எட்டும் வகையில் திட்டமிட்டு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம். முக்கியமாக இம்மாவட்டத்தில் கிடைக்கும் உற்பத்திப் பொருள்கள், பாரம்பரியமாக நம்மிடையே இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட அளவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை உலகளவில் அதிகளவில் சந்தைப் படுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.

பொருள்களை உற்பத்தி செய்வோா் தரமாக உலக தரத்திற்கு ஏற்ற வகையில் உள்ளவனா என்பது குறித்தும் வல்லுநா்கள் மூலம் களஆய்வு மேற்கொள்ளப்படும். வங்கியாளா்கள், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கடனுதவி திட்டங்களை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, புதிதாக தொழில் தொடங்க முன்வருவோருக்கு கடன் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எம்.ஆா்.வாணி, தேசிய வங்கி மேலாளா் சைலேஷ், முன்னோடி வங்கி மேலாளா் ராம்குமாா், கல்லூரி முதல்வா் சிதம்பரதாணு, மாவட்ட தொழில் மைய துணை இயக்குநா் ஆ.பொ்பெட், வங்கி பிரதிநிதிகள், தொழில் முனைவோா், விவசாயிகள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com