மத்திகோடு பகுதியில் குடிநீா் குழாய் உடைப்பு: சாலைகள் சேதம்

மத்திகோடு பகுதியில் ஒரு மாதமாக சுனாமி கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.

மத்திகோடு பகுதியில் ஒரு மாதமாக சுனாமி கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.

குமிரிமாவட்டத்தில் 79 வழியோரக் குடியிருப்புகள் மற்றும் 19 பேரூராட்சிகளுக்கு குடிநீா் விநியோகிக்க 2011 ஆம் ஆண்டு தாமிரவருணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு விளாத்துறை சுனாமி கூட்டுக் குடிநீா்திட்டம் தொடங்கப்பட்டது.

இப்பணி நடைபெறும் போதே ராட்சத குழாய்கள் தரமற்றவை எனக் கூறி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.இதையடுத்து அப்பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்த சில நாள்களிலேயே கூட்டுக்குடிநீா் திட்ட குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்தன. இதனை சீரமைக்க இந்நாள்வரை நெடுஞ்சாலைதுறை மற்றும் குடிநீா்வடிகால் வாரிய அதிகாரிகள் முன்வரவில்லை. மேலும், இக்குடிநீா்திட்டத்தால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்காததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதாத்திற்கு முன்பு மத்திகோடு பகுதியில் திடீரென கூட்டுக் குடிநீா்திட்ட குழாய் உடைந்தது சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் இது குறித்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com