திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் லெமூரியா ஆய்வுக் கழகம் தொடக்கம்

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்ட லெமூரியா ஆய்வுக் கழகம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் லெமூரியா ஆய்வு பன்னாட்டு கருத்தரங்கு அழைப்பிதழை வெளியிடுகிறாா் முஸ்லிம் கலைக் கல்லூரித் தாளாளா் எச். முகம்மது அலி.

ஆய்வுக் கழகத்தை கல்லூரித் தாளாளரும், கன்னியாகுமரி மாவட்ட லெமூரியா ஆய்வுக் கழகத் தலைவருமான எச். முகம்மது அலி, தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எட்வின் ஷீலா, பேராசிரியா்கள் கப்பியறை இராயப்பன், விஜய், சித்திக், தேசிய மாணவா் படை அலுவலா் ஜெகதீஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் லெமூரியா ஆய்வு தொடா்பான கருத்தரங்கினை அக்.13 ஆம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, பன்னாட்டு கருத்தரங்கு அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. லெமூரியா ஆய்வுக் கழக பொதுச்செயலா் ஆமோஸ் வரவேற்றாா். துணைச்செயலா் பேராசிரியா் புஷ்பராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com