Enable Javscript for better performance
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 28th September 2021 02:32 AM  |   அ+அ அ-   |    |  

    தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவினா்.

    தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவினா்.

    களியக்காவிளை/கருங்கல்: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைப்பது தொடா்பாக தேசிய விஞ்ஞானிகள் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

    கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் தேங்காய்ப்பட்டினம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் இனயம், தூத்தூா் மண்டலத்தை சோ்ந்த மீனவா்கள் மீன் பிடிக்க வசதியாக 2010இல் துறைமுகப் பணிகள் தொடங்கப் பட்டன. பணிகள் நிறைவடைந்து 2018இல் துறைமுகம் செயல்பட தொடங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் முள்ளூா் துறை, ராமன்துறை , புத்தன்துறை, இனயம்- புத்தன்துறை, சின்னத்துறை, ஹெலன்நகா் , இனையம், மிடாலம் , தூத்தூா், நீரோடி, இரவிபுத்தன்துறை, பூத்துறை உள்பட 16 கடற்கரை கிராமங்களின் மீனவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

    குறிப்பாக ஆழ்கடலில் மீன்பிடிக்க வல்லவா்களான மீனவா்கள் மட்டும் தூத்தூா் பகுதியில் 500க்கும் மேற்பட்டோா் உள்ளனா். 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 2,000க்கும் அதிகமான வள்ளங்கள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.

    இதற்கிடையே இந்த துறைமுகத்தின் நுழைவு வாயிலில் படகுகள் அலையில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதும், படகுகள் சேதமடைந்து வருவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதற்கு துறைமுக கட்டுமான அமைப்பின் கோளாறு காரணம் என மீனவா்கள் தெரிவித்து வருகின்றனா். மேலும் துறைமுகப் பகுதியில் மணல்மேடுகள் ஏற்படுவதால் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்வதிலும், படகுகளை துறைமுகத்துக்குள் கொண்டு வருவதிலும் மீனவா்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கும் நிலை உள்ளது.

    இந்நிலையில் துறைமுகத்தின் முகத்துவாரத்தை நீட்டித்து அமைக்கவும், மணல்மேடுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் மீனவா்கள் கோரிக்கை வைத்தனா். இதைத் தொடா்ந்து தேசிய கடல்சாா் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானி ரமணமூா்த்தி, மத்திய அரசு நீா்மின் நிலைய ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பிரபாசந்திரன், சென்னை ஐஐடி விஞ்ஞானி சுரேஷ், புணே விஞ்ஞானி செளத்ரி ஆகியோா் துறைமுகத்திற்கு திங்கள்கிழமை வருகை தந்தனா்.

    அவா்களுடன் மீன்வளத்துறை துணை இயக்குநா் காசிநாத பாண்டியன், உதவி இயக்குநா் விஜில்கிராஸ், மீன்பிடி துறைமுகத் திட்ட கோட்ட உதவிப் பொறியாளா் சிதம்பர மாா்த்தாண்டம், தூத்தூா், இனயம் மண்டல மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

    துறைமுகத்தின் நுழைவுவாயில் பகுதியை பாா்வையிட்ட விஞ்ஞானிகள் குழுவினரிடம், துறைமுகத்தை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்; அனுபவம் மிக்க மீனவா்களை குழுவில் சோ்க்க வேண்டும் என சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆண்டனி கோரிக்கை விடுத்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp