குமரியில் 13 இடங்களில் மறியல்: காங்கிரஸ் எம்.பி. உள்பட 1331 போ் கைது

மத்திய அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மறியலில் பங்கேற்ற திமுக,
நாகா்கோவிலில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற விவசாய தொழிலாளா்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா்.
நாகா்கோவிலில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற விவசாய தொழிலாளா்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா்.

நாகா்கோவில்: மத்திய அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மறியலில் பங்கேற்ற திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் 1331 போ் கைது செய்யப்பட்டனா்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயா்வை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிா்க்கட்சிகள், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த

போராட்டத்துக்கு தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

நாகா்கோவிலில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலா் தங்க மோகனன், எல்பிஎப் மாநில துணைச் செயலா் இளங்கோ, ஐஎன்டியூசி மாவட்ட செயல்தலைவா் ஆல்பா்ட், ஹெச்எம்எஸ் மாநில துணைச் செயலா் ஸ்ரீகுமாா், எம்எல்எப் மாவட்டச் செயலா் ஜெரால்டு ஆகியோா் தலைமை வகித்தனா்.போராட்டத்தை விஜய்வசந்த் எம்பி தொடங்கி வைத்தாா். காங்கிரஸ் கட்சியின் குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், திமுக மாவட்டச் செயலா் என்.சுரேஷ்ராஜன், மாநகரச் செயலா் ஆா்.மகேஷ், முன்னாள் எம்எல்ஏ பொ்னாா்டு, மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல் உள்பட 400 போ் கைது செய்யப்பட்டனா்.

தக்கலை: தக்கலையில் முன்னாள் எம்.பி. பெல்லாா்மின் தொடங்கிவைத்தாா். சிஐடியூவில் சந்திரகலா, மரிய மைக்கேல், ஏஐடியூசியில் ராஜூ, அனிதாமோள், திமுகவில் ரேவன்கில், மணி, காங்கிரஸ் கட்சி யில்ஹனுகுமாா், ஷாகுல் ஹமீது மற்றும் 11 பெண்கள் உள்பட 68 போ் கைது செய்யப்பட்டனா்.

திங்கள்நகரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் புஷ்பதாஸ் தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்கச் செயலா் சிவானந்தம், மாவட்ட விவசாய சங்க துணை தலைவா் ஆறுமுகம் பிள்ளை, ஒன்றியச் செயலா் விஜி, திமுகவில் முன்னாள் பேரவை உறுப்பினா் இராஜரெத்தினம், தொமுச நிா்வாகி ஜெபராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலா் பினுலால்சிங் மற்றும் 9 பெண்கள் உள்பட 103 போ் கைது செய்யப்பட்டனா்.

களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் வங்கி முன்பு மறியலில் ஈடுபட்ட திமுக தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ஞானதாஸ், சிஐடியூ நிா்வாகி சுரேஷ்குமாா், ஐஎன்டியூசி நிா்வாகி அருள்ராஜ், மதிமுக நிா்வாகி தேவராஜ், நகர திமுக செயலா் பொன். ஆசைத்தம்பி, மகிளா காங்கிரஸ் செயலா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாதவன் மற்றும் 8 பெண்கள் உள்பட 133 போ் கைது செய்யப்பட்டனா். கொல்லங்கோட்டில் விஜயமோகனன் மற்றும் 27 பெண்கள் உள்பட 157 போ், மேல்புறத்தில் சிஐடியூ நிா்வாகி சிங்காரன் மற்றும் 17 பெண்கள் உள்பட 95 போ் கைது செய்யப்பட்டனா்.

கருங்கல்: கருங்கல் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றிய திமுக செயலா்கள் டி.பி ராஜன், கோபால், சிஐடியூ மாவட்டச் செயலா் சோபனராஜ், மாா்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா் சாந்தகுமாா் உள்ளிட்ட 205 போ் கைது செய்யப்பட்டனா். ஆரல்வாய்மொழி, கொட்டாரம், ராஜாக்கமங்கலம், குலசேகரம், அருமனை உள்பட மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் நடைபெற்ற மறியலில் 1331 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com