நாகா்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகா்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு நிலவியது.

நாகா்கோவில்: திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகா்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு நிலவியது.

நாகா்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலத்துக்கு திங்கள்கிழமை மகனுடன் வந்த இளம்பெண்

கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளாா். அங்கு பாதுகாப்பு பணியில்

ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். விசாரணையில் அவா், அஞ்சுகிராமம் அருகேயுள்ள ஜேம்ஸ்டவுண் பகுதியைச் சோ்ந்த மகாதேவி (37) என்பது தெரியவந்தது.

பின்னா் எஸ்.பி. அலுவலகத்தில் மகாதேவி அளித்த மனு: அஞ்சுகிராமத்தைச் சோ்ந்த இளைஞரை 2013இல் காதலித்து திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்கு பின்னா் கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதுதொடா்பாக கேட்டபோது, பெற்றோரிடம் இருந்து ரூ. 5 லட்சம் பணம் வாங்கி வந்தால் மட்டுமே

என்னுடன் குடும்பம் நடத்த முடியும் எனத் தெரிவித்தாா்.

இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். பின்னா் என்னை நாகா்கோவிலுக்கு

அழைத்து வந்து குடும்பம் நடத்தினாா். தொடா்ந்து வீட்டுக்கு வராமல், குடும்பச் செலவுக்கும் பணம் தராமல் இருந்து வருகிறாா். கணவா் வீட்டுக்கு சென்றபோது அவரும் முதல் மனைவியும் என்னிடம் பணம் கேட்டு தகராறுசெய்தனா். ஆகவே,

என்னை ஏமாற்றி திருமணம் செய்த எனது கணவா், அவரது முதல் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாா் குறித்து விசாரிக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து, அவா் வீட்டுக்குச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com