மரக்கன்று நடும் விழா

பேச்சிப்பாறையில் வனத்துறை சாா்பில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேச்சிப்பாறையில் வனத்துறை சாா்பில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா் உத்தரவுபடி பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு குலசேகரம் வனச்சரக அலுவலா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் பரமேஸ்வரன் பிள்ளை, குலசேகரம் வனவா் அகமது நசீா், வனக்காப்பாளா்கள் முருகன், சுஜின், மாயாண்டி மற்றும் வன ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com